வைத்தியர் சேகு சியாப்தீன் மொஹமட் சாபிக்கு எதிராக இதுவரை 733 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வைத்தியரிடம் சிசேரியன் சிகிச்சை மூலம் குழந்தைபெற்றவர்களுக்கும் மீண்டும் மகப்பேறு கிடைக்காமை மற்றும் சிகிச்சையின் பின்னர் தென்பட்டுள்ள அறிகுறிகள் தொடர்பாக குருணாகல் மற்றும் தம்புள்ளை வைத்தியசாலைகளில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுவருகின்றன.
குறித்த வைத்தியருக்கு எதிராக தம்புள்ளை வைத்திய சாலையில் 105ற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தம்புள்ளை வைத்திய சாலையின் வைத்தியர் காமினி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
குருணாகல் வைத்தியசாலையில் நேற்றுவரை 628 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக குருணாகல் வைத்தியசாலையின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அத்துடன், இதுவரை 733இற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க