விளையாட்டு செய்திகள்

உலக கிண்ண கிரிக்கெட்- 227 ஓட்டங்களை பெற்றது தென்னாபிரிக்கா

உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில், இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான 8-வது லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் டொஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. இதனையடுத்து தென்னாபிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக குயின்டான் டி காக் மற்றும் அம்லா களமிறங்கினர்.

இதில் அம்லா 6 ஓட்டங்களிலும், குயின்டான் டி காக் 10 ஓட்டங்களிலும், பும்ராவின் பந்தில் ஆட்டம் இழந்தனர். பின்னர் களமிறங்கிய டு பிளிஸ்சிஸ் மற்றும் வன்டெர் துஸ்சென் சற்று நிதான ஆட்டத்தை வெளிபடுத்தினார்.

இதில் வன்டெர் துஸ்சென் 22 ஓட்டத்திலும் , டு பிளிஸ்சிஸ் 38 ஓட்டத்திலும் அடுத்தடுத்து ஓரே ஓவரில் விக்கட்டினை இழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய டுமினி 3 ஓட்டத்தில் ஆட்டமிழக்க , பின் ஜோடி சேர்ந்த பெலக்வாயோ மற்றும் டேவிட் மில்லர் அணியை சரிவிலிருந்து மீட்க போராடினர்.

ஆனால் இந்த ஜோடியால் தொடர்ந்து சோபிக்க முடியவில்லை, இதில் டேவிட் மில்லர் 31 ஓட்டத்திலும் , பெலக்வாயோ 34 ஓட்டத்திலும் அடுத்தடுத்து தங்களது விக்கெட்களை பறிகொடுத்தனர்.

அடுத்து களமிறங்கிய ரபடா மற்றும் கிறிஸ் மோரிஸ் அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்த தங்களது சீரான ஆட்டத்தை வெளிபடுத்தினர். இதில் கிறிஸ் மோரிஸ் 42 ஓட்டத்தில் ஆட்டம் இழந்தார்.

இறுதியில் தென்ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 227 ரன்களை எடுத்துள்ளது. கடைசியில் ரபடா 31 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.

கருத்து தெரிவிக்க