கிழக்கு மாகாண ஆளுநராக கிழக்கு மாகாண ஆளுநராக ரோஹன லக்ஷ்மன் பியதாஸவை நியமிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள வருவதாக அரச தரப்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிழக்கு மாகாண ஆளுநராக கடமையாற்றிய எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரரின் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து தமது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து கிழக்கு மாகாண ஆளுநர் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மேல் மாகாண ஆளுநர் பதவிக்கு முஸாம்மில் நியமிக்கப்பட்ட போதிலும் கிழக்கு மாகாண ஆளுநராக இதுவரை எவரும் நியமிக்கப்படாத நிலையில் ரோஹன லக்மன் பியதாஸவை அந்த வெற்றிடத்திற்கு நிகமிக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ரோஹன லக்ஷ்மன் பியதாஸ பேராசிரியர் ஒருவர் என்பதுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க