தினமும் பாதாம் எண்ணெய் அல்லது ஒலிவ் எண்ணெயை முகத்தில் பூசி மசாஜ் செய்து வந்தால் சுருக்கங்கள் நீங்கி முகம் பளபளப்பாகும். மேலும், காய்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி வர தோலின் நிறம் பொலிவு பெறும்.
பாலில் சிறிதளவு தேன் கலந்து தினமும் காலை வேளையில் அருந்தி வந்தால் முகம் அழகாகவும் உடல் பளபளப்பாகவும் மாறுவதோடு எந்த நோய்களையும் எதிர்த்து நிற்கும் ஆற்றலையும் உடல் பெற்றுவிடும். அத்துடன், தயிரோடு சிறிதளவு தேன் கலந்து முகத்தில் பூசி காய்ந்ததும் கழுவி விடவும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் முகச்சுருக்கம் நீங்குவதோடு முகமும் பொலிவோடும் இருக்கும்.
தோடம்பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து பத்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் செய்து வர முகம் பளபளப்பாக மாறும்.
கருத்து தெரிவிக்க