உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது 10 ஆம் திகதி வாக்கெடுப்பு!

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேணைமீது இரண்டு நாட்கள் விவாதம் நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஜுலை மாதம் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் விவாதம் நடைபெறும் என்றும், 10 திகதி மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பியால் முன்வைக்கப்பட்டுள்ள குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்கப்படும் என கூட்டு எதிரணியும், எதிர்த்தே வாக்களிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அறிவித்துள்ளன.

அதேவேளை, நம்பிக்கையில்லாப் பிரேரணையை முறியடிப்பதற்கான சாதாரண பெரும்பான்மையை ஆளுங்கட்சி கொண்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கருத்து தெரிவிக்க