சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குள் புகுந்து புகலிடம் கோருவோர் மீதான கொள்கை கடுமையாக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக நுழையும் இலங்கையர்களை ஏற்றுக்கொள்வது “பூச்சிய வாய்ப்பே” உள்ளதாகவும் அவுஸ்திரேலியா எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற தேர்தல்களைத் தொடர்ந்து, படகுகள் மூலம் ஆட்களைக் கடத்துவோருக்கு எதிராக அமுல்படுத்தப்பட்டிருந்த சட்டங்களில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லையென அவுஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் தெரிவித்துள்ளார்.
Zero Chance என்ற தொனிப்பொருளில் உயிர்களை பாதுகாக்கும் புதிய பிரசார நடவடிக்கையொன்றை அவுஸ்திரேலிய அரசு முன்னெடுக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே பீட்டர் டட்டன் இதனைத் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க