எல்லா பேதங்களையும் மறந்து இலங்கையர் என்ற அடிப்படையில் இன, மதவாதத்தை தோற்கடிக்கும் மன நிலை எல்லா சமூகத்தினருக்கும் உருவாகட்டும் என தான் வாழ்த்துவதாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தனது நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த வாழ்த்துச் செய்தியில் , திரும்புமிடமெல்லாம் இன மதவாத அடிப்படையில் சிந்திக்கத் தலைப்பட்டுவிட்ட ஒரு இக்கட்டான காலகட்டத்தில் இப்புனித நோன்பை அனுசரித்து அதனை நிறைவு செய்து ஈகைத் திருநாளை அடைந்திருக்கின்றோம்.
இனங்களுக்கிடையில் வேண்டுமென்றே உருவாக்கப்படும் குரோத செயற்பாடுகளை இல்லாதொழிக்க வேண்டும் என்பதே இந்நந்நாளில் எனது பிரார்த்தனையாகும்.
இந்த நாட்டை சின்னாபின்னப்படுத்த முயற்சிக்கும் அந்நிய சக்திகள் தேசிய இனங்களுக்கிடையில் விரிசல்களையும், வெறுப்புக்களையும் உருவாக்கி தீராத பகை வளர்க்க முயற்சிக்கின்றன.
எனவே, இதனை நன்குணர்ந்துகொண்டு ஒற்றுமையுடன் இன, மதவாத சக்திகளை முறியடிக்க வேண்டும்.
அதற்கான மன பலத்தை எல்லாம் வல்ல இறைவன் இந்நாளில் தரவும், சௌஜயன்யத்தையும் சமாதானத்தையும் அருள வேண்டும் என்றும் பிரார்த்திக்கின்றேன்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க