உலகம்

இங்கிலாந்தில் ஒரு கிழமைக்கு முன்னரே ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து இருந்தால் இறப்புகள் அரைவாசியாக குறைந்திருக்கும் : விஞ்ஞானி

இங்கிலாந்தில் ஒரு கிழமைக்கு முன்பே ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டிருந்தால் கொரோனா பாதிப்பினால் இறந்தவர்களின் எண்ணிக்கை அரைவாசியாக குறைந்திருக்கும் என இங்கிலாந்து அரசின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் முன்னாள் உறுப்பினர் நீல் பெர்குசன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5176 என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் மார்ச் மாதம் 23 அன்று ஊரடங்கு உத்தரவை இங்கிலாந்தின் பிரதமர், போரிஸ் ஜோன்சன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், கொரோனா வைரசுக்கு எதிராக சரியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. எனினும் மிகவும் கால தாமதமாகவே எடுத்துள்ளது. ஊரடங்கை அமுல்படுத்துவதற்கு முன்னர் கொரோனா தொற்றின் பரவல் இரண்டு மடங்காக இருந்தது. எனவே ஊரடங்கு உத்தரவை ஒரு கிழமைக்கு முன்னர் அறிவித்திருந்தால், இறப்புகளை அரைவாசியாக குறைத்திருக்கலாம் என இங்கிலாந்து அரசாங்கத்தின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் முன்னாள் உறுப்பினரும், தொற்று நோயியல் நிபுணருமான நீல் பெர்குசன் தெரிவித்திருந்தார்.

ஊரடங்கு விதிகளை மீறி தன் பெண் நண்பரை சந்தித்ததால் , பெர்குசன் அரசாங்க கொள்கைகளை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் அவசர நிலைக்கான அறிவியல் ஆலோசனைக் குழுவில் இருந்து விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க