உலகம்

கொரோனா பிரச்சனைகளுக்கு மத்தியிலும் குப்பை அள்ளிய நபரை பாராட்டி கொடுத்த பரிசு, உயிரை பறித்த விபரீதம் !

பிரான்ஸ் நாட்டில் கொரோனாவுக்கு மத்தியிலும் அயராமல் குப்பை அள்ளும் வேலையை செய்து கொண்டு இருந்த தொழிலாளி ஒருவரை உற்சாகப்படுத்தவென உள்ளூரைச் சேர்ந்த நபர் ஒருவர் இரண்டு போத்தல் பியர் கொடுத்துள்ளார்.

ஆனால் அந்த மதுபானம் பல வருடங்களாக அயராது உழைத்த நபரை தற்கொலை வரைக்கும் கொண்டு சென்று விட்டது.

பிரான்ஸில் லெய்ன் என்னும் பகுதியில் குப்பை அள்ளும் வேலையை 26 ஆண்டுகளாக மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் கொரோனாவுக்கு மத்தியிலும் அயராது உழைத்த தொழிலாளிக்கு உற்சாகப்படுத்தவென உள்ளூர் நபர் ஒருவரால் இரண்டு போத்தல் மதுபானம் கொடுக்கப்பட்டது‌. ஆனால் பணியிலிருக்கும் போது மது அருந்தியதாக அவரது மேலதிகாரிகள் அவரை பணி நீக்கம் செய்துள்ளனர். இதனால் மனமுடைந்தவர், தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு 18 வயதில் ஒரு மகனும் உள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஹீரோவாக மதிக்கப்பட வேண்டிய ஒருவருக்கு இரண்டாவது வாய்ப்பினை வழங்கியிருக்கலாம் என கண்ணீர் விட்ட தொழிலாளியின் சகோதரரும் மற்றும் குடும்பத்தாரும் , குறித்த சம்பவம் தொடர்பாக முறைப்பாடு ஒன்றினை அளிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க