நாடாளுமன்ற தேர்தலை விரைவில் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுவருவதாக அரசாங்க தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற ரகசிய சந்திப்பின் போது இது குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் எடுத்திருக்கும் முடிவை அடுத்து இந்த விடயம் பேசுப்பொருளாக மாறியுள்ளது.
நாட்டில் ஸ்திரமான அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு நேற்றைய ரணில் – மஹிந்த சந்திப்பின் போது இந்த விடயம் ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுள்ளது.
எனினும், நேற்று மாலை பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது இது குறித்து ஆராயப்பட்டதா? என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.
கருத்து தெரிவிக்க