அழகு / ஆரோக்கியம்

உடம்பின் சூட்டைக் குறைப்பது எப்படி?

உடற் சூடு எப்போதும் சமநிலையில் இருக்க வேண்டும். உடலில் சூடு அதிகமாகவோ குறைவாகவோ இருப்பது நல்லதல்ல. சிலருக்கு உடலில் சூடு அதிகமாக இருக்கும். இதன் காரணமாக முகத்தில் பருக்கள் தோன்றும். மனதில் பதற்றமும் , ஒருவித எரிச்சலும் கோபமும் ஏற்படும். அதற்கு சில  இயற்கை வழிமுறைகளைப் பின்பற்றினால் உடற்சூட்டைத் தணிக்கலாம்.

காலையும் மாலையும் இயற்கையான சுத்தமான காற்றோட்டம் உள்ள  இடத்தில் இருந்து மூச்சை உள்ளிழுத்து வெளியே விடுவதன் மூலம் மனதை ஒருநிலைப்படுத்தலாம். மேலும், காலையில்  அருந்தும் சூடான பானங்களை தவிர்த்து ,  வெள்ளரிக்காயில் சம்பல் செய்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்

வெள்ளரிக்காய் – பாதி

கரட் – பாதி

தேங்காய் துருவல் – சிறிதளவு

கொத்தமல்லி இலை – சிறிதளவு

பச்சை மிளகாய் – ஒன்று

கட்டித் தயிர் – 4 தேக்கரண்டி

சின்னச்சீரகத்தூள் – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை

வெள்ளரிக்காயின் மேற்தோலைச் சீவி, கரட்டையும் கழுவி எடுத்து பின்னர் இரண்டையும் கரட் சீவும் தட்டில் சீவி எடுக்கவும். பின் மிளகாயையும் கொத்தமல்லி இலையையும் சிறு துண்டுகளாக வெட்டி கலக்கவும். அதன்பின்பு சின்னச் சீரகத் தூள் , உப்பு , தயிர் , தேங்காய்த் துருவல் சேர்த்து விடவும். இதனை காலையில் வெறும் வயிற்றில் 21 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வர உடற் சூடு தணியும் .

ஒரு தேக்கரண்டி நல்லெண்ணையை மெலிதாக சூடாக்கி, அதனுள் 4 மிளகுடன், ஒரு உள்ளியை சிறு துண்டுகளாக வெட்டிப் போடவும். மெல்லிய நெருப்பில் சூடாக்கியதும் இறக்கி சிறிதளவு சூட்டோடு கால் பெரு விரல் இரண்டிலும் நகத்தில் நன்றாகப் படுமாறு பூசி விடவும். இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு கழுவி விடலாம். இது  உடற்சூட்டைக்  குறைப்பது மட்டுமல்லாது மன அழுத்தத்தையும் குறைக்கவல்லது.

கருத்து தெரிவிக்க