ஜனாதிபதி மைத்திரிபால சிறிசனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் நேற்றிரவு முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.
ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.
இக்கூட்டம் முடிவடைந்த பின்னரே ஜனாதிபதியை சந்திப்பதற்காக அலரிமாளிகையிலிருந்து பிரதமர் புறப்பட்டார் என சிறிகொத்த வட்டாரங்களிலிருந்து அறியமுடிந்தது.
சந்திப்பின்போது முக்கியத்துவமிக்க விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன என்று தகவல்கள் வெளியானாலும், இது தொடர்பில் இன்னும் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
கருத்து தெரிவிக்க