உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இருந்து இன்று வரை 2,289 பேர் கைது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதலில் இருந்து இன்று வரை 2,289 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் மற்றும் அதன்பின்னர் நாடு முழுவதிலும் இடம்பெற்ற தோடுதல் நடவடிக்கைகளின் போதும், வடமேல் உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுக்கு உள்ளிட்ட ஒட்டுமொத்தமாக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,289 பேர் என தெரிவித்தார்.

தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் 575 பேரும், பொலிஸ் ஊரடங்கின் போது 213 பேரும், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச சட்டத்தின் கீழ் 72 பேரும், பொதுவான சட்டத்தின் கீழ் 1429 பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இவர்களில் தேசிய ரீதியில் 330 சிங்களவர்கள், 139 தமிழர்கள் மற்றும் 1820 முஸ்லிம் நபர்கள் அடங்குவதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை 423 பேர் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், 211 பேர் பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட 68 பேர் மற்றும் தீவிரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

அத்துடன் இந்த சம்பவங்களோடு தொடர்பு பட்டதாகக் கூறி கைது செய்யப்பட்டவர்களில் 1655 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க