உலகம்

இன்னும் ஓரிரு மாதங்களில் பிரான்ஸில் மோதல்கள் ஏற்படலாம் : அறிவியல் ஆலோசகர் எச்சரிக்கை

கொரோனா தொற்று நோய் காரணமாக ஏற்பட்ட விளைவுகளால் , வரும் கோடை காலத்தில் பிரான்ஸில் மோதல்கள் ஏற்படலாம் என கீல் பல்கலைக்கழகத்தின் சமூக உளவியல் துறை விரிவுரையாளர் , கிளி போர்ட் ஸ்ராட் தெரிவித்துள்ளார். மேலும் பல்லாயிரக்கணக்கானோரின் வேலை இழப்புகள் , பொருளாதார வீழ்ச்சி , இன சமத்துவமின்மை போன்றவையால் எதிர் வரும் மாதங்களில் மோதல்கள் ஏற்படக்கூடும் எனவும் கூறியுள்ளார்.

அத்துடன் காவல்துறைக்கும் சமூகத்தினருக்கும் இடையேயான சுமுகமான உறவைப் பேணுவதற்கு காவல்துறை இப்போதே முயற்சிக்காவிட்டால் பார தூரமான விளைவுகளை சந்திக்க நேரிடலாம் என்றும் தெரிவித்திருந்தார்.

கருத்து தெரிவிக்க