இந்தியா

பிரதமர் மோடி எழுதிய கடிதம்; 2 லட்சம் வீடுகளிற்கு வழங்க முடிவு

புதுச்சேரி : பிரதமர் மோடி எழுதிய கடிதத்தை, புதுச்சேரியில் 2 லட்சம் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்க பா.ஜ.,வினர் முடிவு செய்துள்ளனர். மத்தியில் பா.ஜ., ஆட்சி ஓராண்டு நிறைவை முன்னிட்டு, மக்களுக்கு, அரசின் சாதனைகளை விளக்கும் கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடி எழுதி உள்ளார். இந்த கடிதத்தை, நாட்டில் உள்ள 10 கோடி மக்களிடம் சேர்க்க பா.ஜ.,வினர் திட்டமிட்டுள்ளனர். புதுச்சேரியில் 2 லட்சம் வீடுகளுக்கு பிரதமரின் கடிதம் வழங்குவதுடன், கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, முககவசம் வழங்கவும் மாநில பா.ஜ., தலைமை திட்டமிட்டுள்ளது. இதன்படி, லாஸ்பேட்டை தொகுதியில் கங்கை அம்மன் கோவில் வீதி உள்ளிட்ட 2 கிளைகளில் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் பிரதமரின் கடிதத்தை மாநில பா.ஜ., தலைவர் சாமிநாதன் தலைமையில் நேற்று வழங்கினர்.

பொதுச் செயலாளர் செல்வம், செயலாளர்கள் ஜெயந்தி, லதா, இளைஞர் அணி தலைவர் கோவேந்தன் கோபதி, பொதுச் செயலாளர் வேல்முருகன், மகளிர் அணி பொதுச் செயலாளர் கனகவள்ளி, மாவட்ட மகளிர் அணி தலைவி வள்ளி, தொகுதி தலைவர் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து பா.ஜ வின் அனைத்து அணிகள் சார்பில் மானிலம் முழுவதும் வீடுவீடாகச் சென்று கடிதம் வழங்கப்பட்டது.

கருத்து தெரிவிக்க