குருணாகலை போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் செய்கு சியாப்தீன் முஹம்மட் சாஃபிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் விசாரணை செய்வதற்காக சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட புத்திஜீவிகள் குழுவின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கை இன்றைய தினம் அமைச்சின் செயலாளருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த விசாரணை அறிக்கையை ஆய்வு செய்த பின்னர் வைத்தியர் சாஃபிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் லால் பனாபிட்டிய தெரிவித்துள்ளார். அத்துடன் வைத்தியசாலையின் செயற்பாட்டுக் குழுவினரும் விசாரணைக் குழுவொன்றை அமைக்கவேண்டுமென ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவித்தார்.
இந்த குழுவிற்கு ஜனாதிபதி ஆதரவு தெரிவித்துள்ளதோடு, இந்த குழுவை விஸ்தரிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோரியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க