எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று அலரி மாளிகையில் இன்று காலை இடம்பெற்றது.
இதன்போது நாடு தற்போது எதிர்நோக்கி வரும் பெரும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் இந்த பேச்சுவார்த்தையின் போது விரிவாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பைத் தொடர்ந்து நாடு பெரும் பொருளாதார நெருக்கடியை மேற்கொண்டு வருவதாகவும் அதிலிருந்து எவ்வாறு மீள்வது குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியதாக அமைச்சர் டொக்டர் ஹர்ஷ டி சில்வா தமது டுவிடர் பதிவில் டுவிட் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த பேச்சுவார்த்தையின் போது எதிர்க்கட்சித் தலைவர், பொருளாதார அமைச்சர் மங்கள சமரவீர, திறைசேரி செயலக அதிகாரிகள், கலந்து கொண்டதாக ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க