உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” நிகழ்ச்சித்திட்டம் முல்லைத்தீவில் ஆரம்பம்!

ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உருவான “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” எனும் நிகழ்ச்சித்திட்டத்தின் நான்காவது நிகழ்வு இன்று 03ஆம் திகதி திங்கட்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்தை மையப்படுத்தி முன்னெடுக்கப்படவுள்ளது.

மக்களுக்கு அதிக நன்மைகளை பெற்றுக்கொடுத்தல், நீண்ட காலமாக இருந்துவரும் மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்காக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படது.

ஜனாதிபதி அலுவலகம் மற்றும் பல்வேறு அமைச்சுக்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் சமூக நலன்பேணல் நிகழ்ச்சித்திட்டங்களின் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவிற்கேற்ப ஜனாதிபதி அலுவலகத்தினால் இந்நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இதன்படி, ஜூன் மாதம் 08ஆம் திகதி வரை இந்நிகழ்ச்சித்திட்டம் முல்லைத்தீவு மாவட்டத்தை மையப்படுத்தி நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

மாவட்டத்தின் 06 பிரதேச செயலக பிரிவுகளிலிருந்தும் இனங்காணப்பட்டுள்ள பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க