உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

சுற்றுநிருபம் ரத்துச் செய்யப்படாது! – உறுதியளிக்கும் அமைச்சின் செயலாளர்

கடமைக்கு சமூகமளிக்கும் அரச உத்தியோகத்தர்கள் அணிய வேண்டிய ஆடைகள் தொடர்பில் வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் இடைநிறுத்தப்பட்டதாக ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானது என பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

அந்த சுற்றுநிருபம் தொடர்பில் கடும் எதிர்ப்புக்கள் முன்வைக்கப்பட்டதன் காரணமாக அது இடைநிறுத்தப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாக தெரிவித்தார்.

குறித்த சுற்றுநிருபத்தை ரத்துச் செய்வதற்கான உரிமையும் அதிகாரமும் தமக்கு மாத்திரமே இருப்பதாகவும், அதனை ஒருபோதும் ரத்துசெய்யவதற்கு நடவடிக்கை எடுக்கப்போவதில்லையெனவும் அமைச்சின் செயலாளர் கூறினார்.

அரச நிறுவனங்களில் கடமையாற்றும் ஆண்கள் காற்சட்டையும் சேர்ட்டும், பெண்கள் சாரி அல்லது ஒசரி அணியவேண்டுமெனவும் மற்றும் எந்தவொரு உத்தியோகத்தரும் முகத்தை மறைக்காமல் தமது அடையாளத்தை உறுதிப்படுத்தும் முகமான ஆடைகளை அணியவேண்டுமெனவும் அந்த சுற்றுநிருபத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் இந்த சுற்றுநிருபம் தொடர்பில் இன்று நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தலைமையில் விசேட பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளது.

கருத்து தெரிவிக்க