உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

மஹிந்த – ரணில் மூடிய அறையில் ரகசிய பேச்சு

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் மூடிய அறையில் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று 3ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவுள்ள இந்த சந்திப்பின் போது தற்போதைய அரசியல் நிலைமகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்படும் என கட்சி வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.

பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள அமைச்சர் ரிஷாட் பதியுதின் ஆளுநர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி ஆகியோரது விடயங்கள் குறித்தும் பேசப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு வழங்குவது குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ரணில் – மஹிந்த சந்திப்பு அரசியலில் புதிய மாற்றங்களை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக அமையக்கூடும் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

கருத்து தெரிவிக்க