உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

இலங்கையுடன் பாதுகாப்பு உறவு வளர்ச்சியடைகிறது- அமரிக்க பாதுகாப்பு திணைக்களம்

இலங்கையுடன் பாதுகாப்பு உறவை பலப்படுத்திக்கொண்டுள்ளதாக அமரிக்காவின் பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது.

பாதுகாப்பு திணைக்களத்தின் அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்படடுள்ளது.

அமரிக்காவை பொறுத்தவரையில் அது தென்னாசியாவில் இந்தியாவுடன் பாதுகாப்பு உடன்பாட்டை பேணி வருகிறது.

இதனை தவிர இலங்கை மாலைத்தீவு, பங்களாதேஸ் மற்றும் நேபாளத்துடன் அமரிக்கா பாதுகாப்பு உறவைப் பலப்படுத்தி வருவதாக பாதுகாப்பு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கரையோர பாதுகாப்பு, பயங்கரவாதம்.பாரம்பரிய குற்றங்கள், ஆட்கடத்தல்கள், போதைவஸ்து வியாபாரம் என்பன இந்து சமுத்திரப்பகுதியில் மிகுந்து காணப்படுகின்றன.

இந்த குற்றங்களை தடுக்க இலங்கை உட்பட்ட நாடுகளுடன் பாதுகாப்பில் இணைந்து செயற்படவேண்டியுள்ளது.

இது ஒரு கூட்டுப்பொறுப்பும் ஆகும் என்று அமரிக்க பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை 2018இல் இலங்கையில் அரசியலமைப்பு பிரச்சனை ஏற்பட்டபோதும் அதனை அந்த நாட்டின் உயர்நீதிமன்ற தீர்ப்பு சுமுகமாக்கியது என்றும் அமரிக்க பாதுகாப்பு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க