ஜோதிடம்

பூர்வ புண்ணிய இரகசியமும் – சனியும்! -5

அஷ்டம சனியைப் பார்ப்பதற்கு முன் 5 6 7 ஆம் இடங்கள் முக்கியமானவை என்றும் அவை அஷ்டமத்தோடு நுண்ணிய தொடர்பில் இருப்பவை என்றும்  சொல்லிருந்தோம்.

இதில் 5 – மிடம் ஜாகத்தில் அதி முக்கியமான இடம்பொதுவாகி ஜாதக கட்டத்தில் திரிகோண கேந்திரம் என்பதை குறிப்பாக ஜோதிடர்கள் ஆராய்வார்களா? அதென்ன திரிகோண கேந்திரம்? கீழே இருக்கும் கட்டத்தை கவனியுங்கள்.

இதில் உள்ள 1 5 9 இடங்களே திரிகோண கேந்திரம்.  இந்த இடங்களை இணைத்தால் ஒரு முக்கோணம் உருவாகிறதல்லவா… அந்த முக்கோணத்திலேயே நமது பிறப்பையும, நம் பரம்பரையையும் முடக்கிவிட்டது ஜோதிடம். 1- மிடம் லக்னம் – அதாவது நம்மை குறிப்பது 5 –மிடம் புத்திரர்கள் அதாவது நம் குழந்தைகளை குறிப்பது 9- இடம் நமது தகப்பன்மார்களை குறிப்பது.

பொதுவாக 1,5. 9ஐ வரிசைப்படுத்தும்போது 1இல் இருந்துதான் துவங்குவார்கள். ஆனால் இது உண்மையல்ல. 9,1,5!! இப்போது 9ஆம் இடம் தகப்பனாகவும், 1ஆம் இடம் நாமாகவும் 5ஆம் இடம் நமக்கு பிறக்கும் பிள்ளைகளாகவும் வரிசைப்படும்! இதுதான் சோதிடத்தில் முறை. அதனால்தான் சொன்னேன் இந்த முக்கோணம் நம் பிறப்பையும் பரம்பரையையும் முடக்கிவைத்திருக்கிறது என்று.

இதை சொல்லும்போது கவியரசர் கண்ணதாசன் எழுதிய ‘ தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு’ என்ற பாடல் நினைவுக்கு வருகிறது. அதில் ‘நான் கேட்டு தாய், தந்தை படைத்தானா? இல்லை என் பிள்ளை எனைக் கேட்டு பிறந்தானா? என்ற வரிகள் வரும்! அது எத்தனை உண்மை!

நாம் அரசனுக்கு வாரிசாக பிறக்கப்போகின்றோமா? இல்லை. வறுமையில் வாடும் மனிதருக்கு மகனாய் வரபோகிறோமா? நமக்கு பிறப்பவன் நாடே போற்ற நாடாளுவானா? இல்லை நம் குலத்தையே வேரறுக்கும் குணங்கெட்ட கொடியவனாக வந்திருப்பானா என்பதெல்லாம் நம் கைகளிலா இருக்கிறது!

அதுமட்டுமின்றி இந்த இடத்தை பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று குறிக்கிறார்கள். எப்படி புத்திரனும், தகப்பனும் நம் கைகளில் இல்லையோஇ அப்படிதான் பூர்வ புண்ணியமும்! பல பிறவிகளில் நாம் செய்த கர்ம வினைகளின் தொடர்ச்சியே இப்பிறப்பு….!

 

அதாவது நமது முந்தைய பிறவிகளில் நாம் செய்த செயல்களின் விளைவே இப்போதைய நல் வாழ்வும் நமக்கு நடக்கின்ற நிகழ்வுகளும்!

நாம் எந்தவிதமான செயல்களை ( நன்மை – தீமைகள்) செய்தோம் என்பது இந்த பிறவியில் நமக்கு மறக்கடிக்கப்பட்டிருக்கிறது.

தினமும் கோயிலுக்கு செல்கிறேன். ஆனால் இறைவன் என்மீது இரக்கம் காட்டுவதில்லை என்று தெய்வத்தையே நிந்திக்கும் அளவிற்கு பலர் புலம்புவதை நாம் கேட்டிருக்கின்றோம். ஆனால் கடந்த போன பல ஜென்மங்களில் நாம் செய்த தவறுகளின் தொகுப்புதான் இன்றைய நம் வாழ்வின் துன்பங்கள் என்பதை நாமே உணர மாட்டோம்!

சரி இவையெல்லாம் ஏன் மறைத்து வைக்கப்பட வேண்டும்? இப்படி யோசித்து பார்ப்போம்.

ழூ  போன ஜென்மத்தில் நமக்கு தாயாக இருந்தவர், இன்று நமக்கு மனைவியாக இருந்தால்…….

ழூ  போன பிறவியில் நமக்கு மனைவியாக இருந்தவள், இன்று நம் உடன் பிறந்தவளாகவோ அல்லது நம் நண்பனின், அண்ணனின், தம்பியின் மனைவியாக இருந்தால்….’

ழூ  சென்ற பிறப்பில் நம்மை நஞ்சிட்டு கொன்ற எதிரியே இப் பிறப்பில் நம் மனைவியாக இருந்தால்

இந்த ‘இருந்தால்’ களை கேட்கவே நமக்கு பதறுகிறதே…. அது நடைமுறைக்கு வந்தால் என்னாகும்? என்பதை சற்று யோசித்துப் பாருங்கள்!

நம்மால் யோசிக்கவே முடியாத….நம் கற்பனைக்கே எட்டாத மோசமான விளைவுகளை அது ஏற்படுத்திவிடும் என்பதால்தான் இறைவன் அதெல்லாம் நமக்கு மறைத்திருக்கின்றான் என்பதே உண்மை.

இப்படிப்பட்ட இடத்துக்கு நீதிமான் சனி வரும்போது, நம்புத்திக்கு எட்டாத, தெரியாத, அறியாத நமது பல்வேறு பிறவிகளில் செய்த செயல்களின் விளைவுகளைத்தான் நமது பலன்களாக தருகிறார் என்றே சொல்ல வேண்டும்.

பல்வேறு பிறவிகளில் நம்மை தொடர்ந்தவர்கள் அல்லது நம்முடன் நெருக்கமான உறவு கொண்டவர்கள் 5-மிட சனி நடக்கும்போதுதான் இப்பிறப்பில் புதியவர்களாக நமக்கு அறிமுகம் ஆகிறார்கள் என்றால் அது மிகையில்லை.

எதிர்காலத்தில் நெருக்கமாகப்போகும் மனிதர்களை சந்திப்பது, பின்னாளில் எதிரியாகப்போகும் நபர்கள் அறிமுகம் ஆவது, வாழ்வில் மனைவியாக கூடியவரை முதன்முதலாக பார்ப்பது, புதிய பழக்க வழங்கங்களுக்கு அடிமையாவது ( குறிப்பாக மது) குழந்தையின்மை அல்லது குழந்தை தாமதம். தெய்வ காரியங்களில் அவதூறு ஏற்பட்டு துன்பம் அனுபவித்தல். தமிழறிவு பாதிக்கப்படுதல்மனம் ஒரு நிலையில் நில்லாமல் இருப்பது போன்ற பலன்கள் 5-மிட சனியால் தரப்படுகின்றன.

ஆனால் 5-மிட சனி சுபர்களின் பார்வையில் குறிப்பாக குருவின் பார்வையில் இருந்தால் வாழ்க்கையில் அற்புத பலன்கள் தருவது மட்டுமின்றி தெய்வ அனுகலங்களையும் அள்ளி தருகிறார் என்கிறது ஜோதிடம்.

மேலே சொல்லப்பட்ட பலன்களை உன்னிப்பாக பாருங்கள்….! 6- மிடத்தின் முக்கிய பலன்களே தோயும்இ எதிரியும். உங்கள் எதிரிகளை நீங்கள் சந்திக்கும் ஆரம்ப புள்ளியாகவும், புதிய பழக்க வழக்கத்தினால் ( மதுஇ புகையிலை போதைபொருட்கள்) நமது நோய்களுக்கான விதையும் 5 –மிட சனியாலே நிகழ்த்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

7-மிடம் மனைவியையும்இ நம் காமத்தையும் தெரிவிக்கும் இடம். எப்படிப்பட்ட மனைவி வேண்டும்? அழகிலா குணத்திலா, பண்பிலா, படிப்பிலா என்றெல்லாம் நமது கற்பனைகள் முழு வடிவம் பெறுவது 5-மிட சனி காலத்தில்தான். அதுபோல ஒருவர் பெண்பித்து உள்ளவராக மாற வேண்டும் என்ற விதியிருப்பின் அது நடந்தேற துவங்குவது இக்காலத்தில்தான்.

மனைவி வந்தால்தானே குழந்தை…பிறகெப்படி புத்திரஸ்தானமாகிய 5- க்கும் மனைவி ஸ்தானமாகிய 7-க்கும் தொடர்பின்றிபோகும்! காதல் திருமண விதியுள்ளவர் இக்காலத்தில் தன் துணையை சந்திக்க வேண்டி வரலாம்!

கருத்து தெரிவிக்க