அழகு / ஆரோக்கியம்

ஆரோக்கியமான நீளமான தலைமுடி வளர்வதற்கு….

இன்றைய தலைமுறையினரின் பிரதான பிரச்சனை தலைமுடி. செல்போன் பாவிப்பது , அதிக நேரம் கணினியில் வேலை பார்ப்பது, மன அழுத்தம், நித்திரையின்மை, பொடுகு. இதுபோன்ற பல காரணங்களால் தலைமுடி உதிர்வதுடன் இளவயதிலேயே நரைத்தும் விடுகிறது. இதற்கு சில இயற்கை வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

சின்ன வெங்காயத்தை அரைத்து சாறு பிழிந்து அதனை மண்டையோட்டின் படுமாறு தேய்த்து ஊறவைத்துக் குளித்து வர வேண்டும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இதனைச் செய்து வர பொடுகு நீங்கும்.

சிறுதுண்டு  இஞ்சியுடன் நான்கு தேக்கரண்டி காய்ச்சாத பசும்பால் சேர்த்து அரைத்த விழுதை, மண்டையோட்டில் படுமாறு தேய்த்து மசாஜ் செய்ததும் ஐந்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் குளித்து வரலாம். இதனை வாரத்திற்கு இருமுறை தொடர்ந்து செய்து வர இளநரை மறையும்.

செம்பருத்தி இலைகளை அரைத்து தலைமுடியில் பூசி மசாஜ் செய்து குளிக்கலாம். அதேபோன்று துளசி இலை, குப்பை மேனி இலை, வேப்பங்கொழுந்து என்பனவற்றையும் வாரம் ஒரு இலையாக அரைத்துக் குளித்து வர தலைமுடி அடர்த்தியாக நீண்டு வளரும். இதுமட்டுமல்லாமல் நாம் சாப்பிடும் உணவில் பச்சைக் காய்கறிகள் , பழங்கள்,  மீன் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளவேண்டியது அவசியம்.

கருத்து தெரிவிக்க