சமுர்த்தி நிவாரண உரித்துப் படிவம் வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் இடம்பெற்றது.
கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் 4, 500 பேருக்கு இந்த திட்டம் வழங்கி வைக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட 13,073 சமுர்த்தி பயனாளிகளுக்கு சமுர்த்தி நிவாரண உரித்துப் படிவம் வழங்கும் ஆரம்ப நிகழ்வின் முதல் கட்டமே முன்னெடுக்கப்பட்டது.
ஏனையோருக்கு பிரதேச செயலகங்களின் ஊடாக வழங்கி வைக்கப்படவுள்ளதா தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் ஆரம்ப கைத்தொழில்,மற்றும் சமூக வலூட்டல் அமைச்சர் தயாகமகே, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், கிளிநொச்சி படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய கிளிநொச்சி சமூர்த்தி பணிப்பாளர் ஆரனி தவபாலன் மற்றும் பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கருத்து தெரிவிக்க