இலங்கை

பாரிய மோசடியில் சிக்கிய மறைந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் இளைய மருமகன்!

மறைந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் இளைய மகளின் கணவர் மிகப் பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியப் பிரஜையான தர்ஷன் Yapka Developers (PVT) Limited நிறுவனத்திடமிருந்து ரூ .10 மில்லியன் கமிஷனைப் பெற்றார் என்று குற்றப் புலனாய்வுத்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என ஊழல் எதிர்ப்பு தேசியக் கூட்டணி தெரிவித்துள்ளது.

இது குறித்து ஊழல் எதிர்ப்பு தேசியக் கூட்டணி பதில் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் மூலம் முறையிட்டுள்ளது.

அந்த முறைப்பாட்டில், “ஆறுமுகம் தொன்டமானின் அமைச்சில் தர்ஷன் உயர் பதவியில் இருந்தார். அவர்தான் அமைச்சால் மேற்கொள்ளப்பட்ட கட்டுமானம் மற்றும் பல்வேறு திட்டங்கள் போன்றவற்றுக்குப் பொறுப்பாகச் செயற்பட்டதுடன் அனைத்து கட்டுமான மற்றும் திட்டங்களுக்கும் அவர் 10‰ கமிஷனைப் பெற்றார் என்பது விசாரித்தபோது தெரியவந்ததாகவும்
மீள்குடியேற்ற அமைச்சால் செயற்படுத்தப்பட்ட வீட்டுத் திட்டம் மீள்குடியேற்ற அமைச்சால் Yapka Developers (PVT) Limited நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பதற்கு தர்ஷன் கமிஷன் பெற்றார் என்று தற்போது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆயிரம் வீடுகளுக்கு தர்ஷனின் கமிஷன் 10 கோடி ரூபா. பணத்தில் ஒரு பகுதி முற்கூட்டியே செலுத்தப்பட்டதாக முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.
மீள்குடியேற்ற அமைச்சகத்துடன் இந்தத் திட்டத்தை ஒருங்கிணைத்த விஜயலட்சுமி கேதீஸ்வரம் இதற்கு உடன்படாததால் அவரை தர்ஷனும் தொன்டமானின் செயலாளர் முகம்மதுவும் அச்சுறுத்தியுள்ளனர்” – என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க