நியூசிலாந்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை பூச்சியத்தை அடைந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக அமுல்படுத்தப்பட்டிருந்த அத்தனை கட்டுப்பாடுகளும் இன்னும் சில மணித்தியாலங்களில் தளர்த்தப்படவுள்ளன.
இரண்டு கிழமைகளாக நியூசிலாந்தில் கொரோனா தொற்றால் எவரும் பாதிக்கப்படவில்லை என அந்நாட்டு சுகாதார துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், சமுக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்ற கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன. பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கும் தடையில்லை. எனினும் மற்றைய நாடுகளுக்கான நியுசிலாந்தின் எல்லைகள் மூடப்பட்டிருக்கும்.
நியூசிலாந்தில் புதிதாக எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்ற தகவலை கேட்டதும், மகிழ்ச்சியில் திளைத்து சிறிய நடனம் ஆடியதாக அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆடென் , பத்திரிகையாளர்களின் சந்திப்பின் போது தெரிவித்தார்.
எனினும் கொவிட் 19 பாதிப்பிற்கு முன்னர் இருந்த இயல்பு நிலைக்கு அவ்வளவு இலகுவாக நாம் சென்றுவிட இயலாது. இதுவரை உடல் நலத்திலும், சுகாதார துறையிலும் இருந்த அதிக கவனத்தை, நாட்டின் பொருளாதார கட்டமைப்பின் மீது செலுத்தப்பட வேண்டும். அதோடு இது ஒரு மைல்கல் என்பதனையும் மறுப்பதற்கில்லை எனவும் , பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றிய நியூசிலாந்தின் பிரதமர், நாட்டு மக்களுக்கு நன்றியினையும் தெரிவித்திருந்தார்.
கருத்து தெரிவிக்க