உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

ஜனாதிபதி மைத்திரிக்கு வந்த இன்னுமொரு சிக்கல்! – ரத்தன தேரர் உண்ணாவிரத களத்தில்

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் இன்று கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈபட்டுள்ளார்.
மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மற்றும் அமைச்சர் ரிசார்ட் பதியூதீன் ஆகியோரை பதவியிலிருந்து விலக்க வேண்டுமெனவும் மற்றும் தாய்மாருக்கு கருச்சிதைவு சத்திரசிகிச்சை செய்த குருணாகல் வைத்தியர் சாஃபி மீதான விசாரணையை துரிதப்படுத்த வேண்டுமெனவும் கோரி ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுப்பதற்காகவே அவர் இந்த உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி இந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தாம் இந்த இடத்தைவிட்டு அசையப் போவதில்லையென அவர் தெரிவித்துள்ளார்.
இன்று காலை 9 மணிக்கு தலதா மாளிகைக்கு சென்று அவர் வழிபாடுகளில் ஈடுபட்டு அதன் பின்னரே காலை 10.15 அளவில் இந்த உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்.
இதன்போது ஊடகவியலாளர்களுக்கு அவர் கூறுகையில், அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ், ரிசார்ட் பதியூதீன் மற்றும் வைத்தியர் சாஃபி ஆகியோருக்கு எதிராக ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளதாகவும் அதன் பிரதியொன்றை பிரதமருக்கும், அமைச்சுக்களுக்கும் பிரதிகளை அனுப்பியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்து தெரிவிக்க