நேர்காணல்கள்

ஹப்புத்தளை- தம்பேதன்னை இலக்கம் ஒன்று தமிழ் கனிஸ்ட வித்தியாலயத்தில் அடிப்படை வசதிகள்

ஹப்புத்தளை தம்பேதன்னை இலக்கம் ஒன்று தமிழ் கனிஸ்ட வித்தியாலயத்தின் அடிப்படை வசதிகள் இன்னும் செய்துக்கொடுக்கப்படவில்லை.

இந்த முறைப்பாட்டை பாடசாலை மாணவர்களின் பெற்றோர் ஊடகனுக்கு தெரிவித்துள்ளனர்.
எனினும் அந்த பாடசாலை கல்வியால் உயர்ந்துநிற்கிறது

பதுளை மாவட்டத்தில் இந்தப்பாடசாலை கல்விப்பொதுத்தராதரத்தில் 100வீதப்பெறுபேறுடன் முன்னிலை வகிக்கிறது.

ஹப்புத்தளையில் இருந்து 11 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள இந்தப்பாடசாலைக்கு நேரடியான போக்குவரத்து வசதிகள் இல்லை.

தம்பேதன்ன தேயிலை தொழிற்சாலை வரையில் போக்குவரத்து வசதி உள்ளது
அதற்கு அப்பால் பாடசாலைக்கு நடந்தே செல்லவேண்டும்

இந்தநிலையில் கடந்த 12 வருடங்களாக பொன்னுசாமி பரமேஸ்வரன் இந்தப்பாடசாலையின் புலமைப்பரிசில் மற்றும் கல்விப்பொதுத்தராதரப்பரீட்சை பெறுபேறுகள்; 100 வீதமாக வெளிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தப்பாடசாலையில் 26 ஆசிரியர்கள் கடமையில் இருக்கவேண்டும்

எனினும் 14 ஆசிரியர்களே பணியில் உள்ளனர்

இதனை எவ்வாறு பாடசாலை நிர்வாகம் சமாளிக்கிறது என்று பார்க்கும்போது ஏற்கனவே இந்த பாடசாலையில் படித்து நல்லப்பெறுபேறுகளுடன் உள்ள பழைய மாணவர்களும் சுயமாக வந்து கல்விப்புகட்டல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்காரணமாக முழுமையான சேவையை செய்யமுடிவதாக பாடசாலை நிர்வாகம் கூறுகிறது.
இது ஒரு பெருந்தோட்டப்புற பாடசாலையாக இருக்கின்றபோதும் ஹப்புத்தளை நகரத்தில் இருந்து வந்து மாணவர்கள் இங்கு கல்விகற்கின்றனர்.

இதன்படி நகரப்பாடசாலைகளுக்கு பெருந்தோட்டப்புற பாடசாலைகள் சளைத்தவை அல்ல என்பதை இந்தப்பாடசாலை உணர்;த்தி வருகிறது.

இந்தப்பாடசாலையில் தற்போது 565 மாணவர்கள் கல்விகற்கின்றனர்.

இந்தப்பாடசாலையில் 100 வீதப் பெறுபேற்றை மாணவர்கள் கல்விப்பொதுத்தராதர சாதாரணத்தரப்பரீட்சையில் பெறுகின்றபோதும் உயர்தரத்துக்கு சென்ற பின்னர் அவர்கள் பாரிய சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

பல மாணவர்கள் வசதிகள் இல்லாமை காரணமாக கல்விப்பொதுத்தராதர உயர்த்தர கல்வியை தொடரமுடியாமல் இடைவிலகிவிடுகின்றனர்.

இதுவரை இந்தப்பாடசாலையில் கற்ற 7 பேர் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகியுள்ளனர்

இந்தப்பாடசாலைக்கு ஆசிரியர் வெற்றிடங்கள் இருப்பதற்கு காரணங்களை கண்டறியும்போது கல்வித்திணைக்களம் ஆசிரியர்களை நியமிக்கமுன்வருகிறது

எனினும் பாடசாலையின் நிர்வாகம் கற்றல் நடவடிக்கைகளில் இறுக்கமான நிலைப்பாட்டில் இருப்பதால் புதிய நியமனங்களுக்குரிய ஆசிரியர்களும் இந்தப்பாடசாலைக்கு வருவதில்லை என்று குற்றம் சுமத்தப்படுகிறது.

இந்த விடயத்தில் ஆசிரியர் பணி என்ற சொல்லுக்கு இருக்கின்ற அர்ப்பணிப்பு தன்மை கேலிக்கூத்தாகி அது ஒரு தொழில் மாத்திரம் என்று நிலை ஏற்பட்டு விட்டமையை உணரமுடிகிறது.

நியமனங்கள் வழங்கப்படுகின்றபோது அதில் சலுகைகளுக்கு இடமில்லை.
எனினும் இறுதியாக வழங்கப்பட்ட ஊவா மாகாணசபையினால் வழங்கப்பட்ட பட்டதாரி நியமனத்தின்போது இந்தப்பாடசாலைக்கு ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

எனினும் 14 நாட்களுக்குள் அவர் கடமையை பொறுப்பேற்காதமையை அடுத்து தேடிப்பார்த்தபோது அவர் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி வேறுப்பாடசாலைக்கு சென்றுவிட்டமை தெரியவந்தது.

பாடசாலையின் பெறுபேறு இந்த அளவுக்கு முன்னேற்றமாக இருப்பதற்கான காரணம் என்னவென்று ஆராய்ந்தபோது மூன்றாம் வகுப்புக்கு மேல் 11 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாள்தோறும் பாடசாலை நேரத்தை தவிர 2 மணித்தியாலங்கள் கற்பித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த நடவடிக்கைகளுக்கு மாணவர்களும் அதேபோன்று ஆசிரியர்களும் உணர்வுடன் ஒத்துழைப்பு வழங்குவதாக பாடசாலை நிர்வாகம் கூறுகிறது.

தம்பேதன்ன இலக்கம் ஒன்று தமிழ் கனிஸ்ட வித்தியாலயத்தின் கட்டிட வசதிகளை பார்க்கும்போது இன்னும் ஐயாயிரம் சதுர அடி காணியில் ஒரு கட்டிடம் தேவைப்படுவதாக பாடசாலை நிர்வாகம் சுட்டிக்காட்டுகிறது

பாடசாலைக்கு வரும் ஆசிரியர்கள்இ எவ்வித எதிர்ப்பார்ப்பும் இன்றி காலை 7.30 மணிக்கு நேரத்துக்கு தமது சொந்த செலவில் முச்சக்கர வண்டிகளிலும் போக்குவரத்துக்களிலும் நடந்தும் வருகின்றனர்.

பாடசாலைக்கு வரும் மாணவர்களில் தோட்டப்புறப்பகுதிகளில் குறிப்பாக வரும் மாணவர்கள் காட்டின் ஊடாகவே இந்தப்பாடசாலைக்கு வருகின்றனர்.

இதன்போது அவர்கள் மழையின்போது சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

தேன்பூச்சிகள் உட்பட்ட பல்வேறு பூச்சிகளின் தாக்கத்துக்கு அவர்கள் உள்ளாகின்றனர்.

ஐந்து கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள தம்பேதன்ன இலக்கம் இரண்டு பாடசாலை10 கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள தம்பேதன்ன இலக்கம் மூன்று பாடசாலை ஆறாம் வகுப்புவரை உள்ள நாயபெத்த இலக்கம் 2 ஆகிய பாடசாலைகளில் இருந்து மாணவர்கள் தம்பேதன்ன இலக்கம் ஒன்று பாடசாலைக்கு வருகின்றனர்.

ஆறாம் வகுப்புக்கு வரும் பெருந்தோட்டப்புறங்களின் மாணவர்களில் எழுதவாசிக்க தெரியாத அளவில் பல மாணவர்கள் வருகின்றனர்.

எனினும் அவர்கள்இ தமது பாடசாலைக்கு வந்ததும் அவர்களுக்கு ஒரு காலவரையறையை நிர்ணயித்து அவர்களை எழுதவாசிக்க பயிற்றுவி;க்கப்படுகிறது.

இந்த தி;ட்டத்தை பொறுத்தவரையில் தமது பாடசாலை வெற்றிக்கண்டுள்ளதாக பாடசாலையின் நிர்வாகம் தெரிவிக்கிறது.

பெற்றோரின் ஒத்துழைப்பு முழுமையாக உள்ளது.

பெற்றோருடன் மாணவர்கள் தொடர்பாக பேசவேண்டுமானால் பாடசாலை நிர்வாகம் மாலை 4 மணிக்கு பின்னரே நேரத்தை ஒதுக்குகிறது

எனவே பெற்றோர் அனைவருமே தமது பிள்ளைகளில் அக்கறைக்கொண்டவர்களாக பாடசாலை நிர்வாகம் அழைப்பு விடுக்கும் கூட்டங்களுக்கு சமுகம் அளிக்கின்றனர்.

இந்தப்பாடசாலை இந்தளவு பெறுபேறுகளை பெற்றுள்ளபோதும் ஏன் இன்னும் இந்த பாடசாலை கனிஸ்ட பாடசாலையாகவே கருதப்படுகிறது.

இந்தப்பாடசாலை மகாவித்தியாலமாக மாற்றாமைக்கான காரணம் என்னவென்று ஊடகன் தேடிப்பார்த்தது.

மகாவித்தியாலயமாக மாற்றிவிட்டால் அடிப்படை வசதிகளை செய்துக்கொடுக்கவேண்டும் என்பதற்காகவே இந்தப்பாடசாலையை கனிஸ்ட வித்தியாலயமாகவே தொடர்ந்தும் வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

சாதாரண பாடசாலை ஒன்றுக்கு இருக்கவேண்டிய அடிப்படை வசதிகளில் 50வீதமான வசதிகளே இந்தப்பாடசாலையில் இருக்கின்றன.

டியூசன் கலாசாரம் தெரியாத பாடசாலையாக இந்த பாடசாலை இருப்பதாக தம்மேதன்ன இலக்கம் ஒன்று பாடசாலை பெருமிதம் கொள்கிறது

நாட்டில் உள்ள பல பாடசாலைகளில்இ அந்தப்பாடசாலை ஆசிரியர்களே டியூசன் என்ற பிரத்யேக வகுப்புக்களுக்கு வருமாறு மாணவர்களை ஊக்குவிக்கின்றனர்.

எனினும் தமது பாடசாலை மாணவர்கள் எவருமே பிரத்யேக வகுப்புக்கு செல்வதில்லை.
இந்தப்பாடசாலைக்கு காணி இருந்தும்கூட ஒரு விளையாட்டு மைதானம் அமைத்துக்கொடுக்கப்படவில்லை

கல்வித்திணைக்களத்தை அனுகுகின்றபோது மைதானத்துக்கான ஒதுக்கீடுகளை அரசியல்வாதிகளே செய்யவேண்டும்.

எனவே அவர்களிடம் கோரிக்கையை முன்வையுங்கள் என்று கல்வித்திணைக்களத்தினால் கூறப்படுகிறது

எனினும் அரசியல்வாதிகள் இதுவரை இந்தப்பாடசாலையின் மைதானம் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஒழுக்கத்தில் இந்தப்பாடசாலை சிறந்தப்பாடசாலையாகவே செயற்பட்டு வருகிறது.

சிறிய மாணவர்கள் முச்சக்கர வண்டிகளில் பாடசாலைக்கு வரமுடியும்

ஆனால்இ பெரிய மாணவிகள் முச்சக்கர வண்டிகளில் வரக்கூடாது

அவர்கள் பலராக ஒன்றுசேர்ந்து பாடசாலைக்கு வந்து செல்லவேண்டும் என்பது நிர்வாகத்தின் ஒழுங்கு விதிகளில் ஒன்றாக உள்ளது.

இது மாணவிகளின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு நிர்வாகத்தினால் எடு;க்கப்பட்ட நடவடிக்கையாகும்.

ஹப்புத்தளை தம்பேதன்ன தமிழ் கனிஸ்ட வித்தியாலயம் இந்தளவு சாதித்தநிலையில் அங்கிருந்து கல்விப்பொதுத்தாரதர சாதாரணத்தரத்தின் சிறந்த பெறுபேறுகளுடன் வெளியேறும் மாணவர்களில் பலர் வசதிகள் இல்லாமையால் உயர்தரத்தை தொடரவில்லை.

வசதியுள்ளவர்கள் கணித மற்றும் விஞ்ஞானப்பிரிவுகளுக்காக வெளிமாகாணங்களுக்கு செல்கின்றனர்

ஏனையவர்கள் ஹப்புத்தளை மற்றும் பண்டாரவளைக்கு செல்கின்றனர்.

எனினும் தமது பாடசாலை தரம் உயர்த்தப்பட்டு கல்விப்பொதுத்தராதர உயர்தரத்தை நடத்தக்கூடிய வசதி செய்துக்கொடுக்கப்படுமானால் தாம் நிச்சயமாக கல்விப்பொதுத்தராதர சாதாரணத்தரத்துடன் இடைவிலகும் மாணவர்களையும் இணைந்து பலரை பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பமுடியும் என்று நிர்வாகம் சவால் விடுகிறது.

கருத்து தெரிவிக்க