ஜோதிடம்

‘அதிர்ஷ்டமும் தரும் அர்த்தாஷ்டம சனி – 4

தமிழகத்தில் இருந்து குணா
————————————————–
‘அர்த்தாஷ்டம சனி கொடுக்கும் தாக்கத்தை தவிர்க்க முடியுமா? என்றால் ‘முடியும்!’ என்று சென்ற இதழில் கூறியிருந்தோம்.
கூடுதலாக அர்த்தாஷ்டம சனி அதிர்ஷ்டத்தையும் கொடுக்க வல்லது என்று அறுதியிட்டும் கூறலாம்!
எண்ணம் போல் வாழ்க்கை என்ற சொற்றொடர் தான், நம் எண்ணங்களே நமது வாழ்வின் அடித்தளம்!
நம் எண்ணங்களே நமது வாழ்வின் ஒவ்வொரு பக்கங்களையும் படைகிறது.
அதுவேதான் சொர்க்கத்தை உருவாக்குகிறது, நரகத்தையும் தோற்றுவிக்கின்றது.
நமது எண்ணங்களே,மற்றவரிடமிருந்து நம்மை பிரித்து அடையாளப்படுத்தும் அருவ மொழியாகும்!
இன்னும் விளங்க சொல்ல வேண்டுமானால் அது மனிதருக்கு மனிதர் மாறுபடும் முகங்கள் போல!கைரேகைகள் போல!
ஆனால் நம் எண்ணங்கள் உருவாக காரணங்கள் பலவாக இருக்கின்றன. அதில் குறிப்பிடத்தக்கது 1.நமது வளர்ப்பு முறை,
2. நமது வெளியுலக சூழல், 3.நமது ஆசைகள்.
எண்ணங்கள் தோன்றுவதற்கு ஆசையேதான் காரணம். வளர்ப்பு முறையும், வெளியுலக சூழலும் எப்படி காரணங்களாக முடியும்? என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால் உண்மை அதுவே!
நாம் யாரைப்பார்த்து வளர்கிறோம் என்பது மிகவும் முக்கியமானதே!
பெரும்பாலும் நாம் தாய், தந்தையரை பார்த்து வளர்கிறோம்.
அதனைப்பொறுத்தே நமது பண்புகளும், குணங்களும்.அதன் பால் ஏற்படும் என்னங்களும் அமைகின்றன.
நல்ல பண்புள்ள, குணமுள்ள தாய், தந்தையர் அமைந்தால் நல்ல மனிதராகவும், அதற்கு மாறாக அமைந்தால் தீய அல்லது நல்ல குணமற்ற மனிதராய் இருப்பதும் இயல்பு தானே!
நிலத்தை பொறுத்து தானே பயிர் விளையும்!
சரி, எப்படிப்பட்ட வளர்ப்பு முறையாக இருந்தாலும் வெளியுலகத்தைப் பார்த்து கற்றுக்கொள்வதில் தான், நம் எண்ணங்கள் முழு வடிவம் பெறுகின்றன.
பெரும்பாலும் நம் நண்பர்களே நமது ஆரம்ப கால வெளியுலகமாக இருக்கிறார்கள்.
நாளடைவில் அந்த நண்பர்களின் சேர்க்கையே  நமது எண்ணங்களை நன்மையாகவோ தீமையாகவோ மாற்றுகிறது.
இந்த அடிப்படையில்தான் நமது ஆசைகள் எழுகின்றன.
இந்த ஆசையே செயல் எண்ணங்களாக உருவாக்கம் பெறுகின்றன.
இதன் சங்கிலித்தொடரே நமது செயல்கள் மற்றும் அந்த செயல்களால் வரும் பலன்கள்.
பலன்கள் நன்மையும் அளிக்கலாம். தீமையும் அளிக்கலாம்.
அதுகூட முக்கியமில்லை. “இதை இப்படி செய்தால், அது அப்படியாகும்” என்ற அனுபவம் கிடைக்கிறதே. அதுவே முக்கியம்.
ஏழரைச்சனியில் நமக்கு கிடைக்கும் அனுபவப் பாடங்களை 4ஆம் இட சனிக்காலத்தி;ல் மறந்து விடாமல் கடைப்பிடித்தால், துன்பங்கள் நம்மை தீண்டாது. மாறாக, அதிர்ஷ்டம் அதிரடியாக வரும்.
ஏனென்றால், நான்காமிடம் பண்பு,படிப்பு, வீடு, வாகனம் மற்றும் சுகங்களை குறிக்கக்கூடிய இடம்.
வீடு பண்பு என்றாலே, தாய் தந்தையரின் ஞாபகம் வருகிறதா?
ஆமாம், நான்காம் இடம், தாயின் ஸ்தானம். சனிபகவானோ தாய் பாசத்தில் சிறந்தவர் என்று புராணங்கள் கூறுகின்றன.
தாயை மதிப்பவர்கள் வாழ்வில், சனி ஒருபோதும் தீங்குகள் செய்வதில்லை.
அது மட்டுமன்றி நன்மைகளையும் தரமுயற்சிக்கிறார்.
ஆனால் தாய் மட்டுமன்றி பிற பெண்களையும் தாயைப் போல் மதித்து போற்றும் பண்பும், மாண்பும் நமக்கிருந்தால், அதிர்ஸ்ட மழையையே சனி பகவான் பொழிவிப்பார் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை.
இதற்கு ஆதாராமாக விளங்குகிறது. திருவானைக்காவில் உள்ள அகிலாண்டேஸ்வரி உடனாய ஜம்புகேஸ்வரர் திருக்கோயில்.
தமிழகத்தி;ல் நீர் நிலம் நெருப்பு காற்று; ஆகாயம் போன்வற்றுக்கு கோயில் இருப்பது உங்களுக்கு தெரிந்த விடயமே.
அதில் திருச்சி அருகில் திருவாணக்கா கோயில் பஞ்சப்பூதங்களுக்கான கோயில்களில், நீருக்குள்ள விசேஷ தலாமாக விளங்குகிறது.
இதுவும் பலருக்கு தெரிந்து இருக்கலாம்.
ஆனால் சனிஸ்வரன், பாலகன் வடிவில், தாயின் மடியில் அமர்ந்து சுபப்பார்வை பார்த்து அருள் பாலிப்பது இங்குதான்.
சந்திரனே, பஞ்சபூதங்களில் நீருக்கான கிரகம். அந்த சந்திரனே மாதுர்காரகனும் ஆவார். சூரியனை தந்தைக்குரிய கிரகமாக சோதிடம் எப்படி சிறப்பிக்கிறதோ, சந்திரனை தாய்க்குரிய கிரகமாக சோதிடம் போற்றுகிறது.
அதனால்தான் அங்கிருக்கும் அம்பாள் அகிலாண்டேஸ்வரியாக திருநாமம் கொண்டிருக்கிறாள்.
அதாவது அகில உலகத்துக்கும் தாய் என்ற அர்த்தத்தில்!
அப்படி தாயை சிறப்பிக்கும் ஸ்தலத்தில் தாயின் மடியில் அமர்ந்தபடி காட்சியளிக்கிறார் என்றால், தாயைப் போற்றுபவர் வாழ்விலும், தாயைப் போல பிறப்பெண்களை போற்றுபவர் வாழ்விலும், அர்த்தாஷடம சனி வரும்போது, சனிபகவான், எவ்வளவு அதிர்ஷடங்களை அள்ளித்தருவார் என்று எண்ணிப்பாருங்கள்!
ஆக, தாயிற் சிறந்த கோயிலும் இல்லையென்பதே, அர்த்தாஷ்டம சனியின் மகா பரிகாரமாகும்.
“அஷ்டம சனியினைப்பற்றி”… என்று நீங்கள் கேட்க அவசரப்படுவது. நமக்கு புரிகிறது.
ஆனால் ஒவ்வொரு படியாக ஏறுவதுதானே இயல்பு!
அஷ்டம சனிக்கும், அதாவது 8ஆம் இடத்துக்கு முன் 5,6.7 ஆம் இடங்கள் இருக்கிறதே!
இவைகளுக்கும் அஷ்டம சனிக்கும் மிகுந்த தொடர்பு இருக்கிறதே! ஒரே தாவாக தாவிவிட்டால், இந்த தொடர்பின், அர்;த்தம் நமக்கு புரியாமல் போய்விடும்?
திடீர் வாழ்வு வந்தவனுக்கு வாழ்வென்றால், என்னவென்று புரியாமல் போகுமே!
அதுபோல 5.6.7ஆம் இடங்களின் அர்த்தத்தையும் இவைகளுடன் அஷ்டமத்து சனிக்கான தொடர்பையும், அடுத்து வரும் இதழ்களில் வரிசையாகப் பார்ப்போம்.

கருத்து தெரிவிக்க