இலங்கை அரசாங்கமும் பீஜிங்கை தலைமையகமாகக் கொண்ட ஆசியன் அடித்தள வசதி முதலீட்டு வங்கியும் இன்று 200 மில்லியன் டொலர்களுக்கான கடன்பெறல் ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
அத்துடன் 80 மில்லியன் டொலர்கள் வேறு ஒரு தேவைக்காக தனியாக பெறப்படுவதற்கான ஆவணத்திலும் இரண்டு தரப்பும் கைச்சாத்திட்டன.
இந்தக்கடன், இலங்கையால் ஆசியன் அடித்தள வசதிகள் முதலீட்டு வங்கியிடம் இருந்து பெறப்படும் முதலாவது கடனாகும்.
இந்த வங்கி, உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றவை போன்று பல்வேறு தேவைகளுக்கான நிதிநிறுவனமாக செயற்பட்டு வருகிறது.
கருத்து தெரிவிக்க