கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 31ம் திகதி வெலிகம – பெலேன பகுதியிலுள்ள விருந்தகமொன்றின் முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக கடந்த பெப்ரவரி 27ம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அதற்கிணங்க குறித்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்ததிற்கிணங்க தலைமறைவாகயிருந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் கடந்த மார்ச் 19 சரணடைந்திருந்தார்.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 03) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட தேசபந்து தென்னகோனை எதிர்வரும் ஏப்ரல் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் உத்தரவிட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க