நரேந்திர மோடி 2-வது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.
இன்று மாலை இது தொடர்பான நிகழ்வு இந்திய ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.
17-வது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுக்க நடைபெற்ற தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்றது. பாரதீய ஜனதா மட்டும் தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு 303 இடங்களை கைப்பற்றியது.
எனினும் கடந்த 2014-ம் ஆண்டு தனித்து ஆட்சியை பிடித்த போது கூட்டணி கட்சிகளையும் அமைச்சரவையி;ல்; சேர்த்துக் கொண்டதை போல், இந்த முறையும் பாரதீய ஜனதா கூட்டணி அரசு அமைக்கிறது.
ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.
மோடிக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிரதமராக பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
நிகழ்வில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியாகாந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
அழைப்பை ஏற்று ‘பிம்ஸ்டெக்’ அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகளான பங்களாதேஸ் ஜனாதிபதி முகமது அப்துல் ஹமீது, இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒளி, மியான்மர் அதிபர் யூ வின் மையின்ட், பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் ஆகியோரும் மற்றும் மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத், கிர்கிஸ்தான் அதிபர் சூரோன்பே ஜீன்பிகோவ் ஆகியோரும், தாய்லாந்து நாட்டின் பிரதிநிதியும் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டனர்.
கருத்து தெரிவிக்க