பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்குமிடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பு அடுத்தவாரம் அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது என சிறிகொத்த வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
ஐக்கிய தேசிய முன்னணியை, ‘ ஜனநாயக தேசிய முன்னணி’ என்ற பெயரில் அரசியல் கட்சியாகப் பதிவுசெய்வதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், ஜனாதிபதித் தேர்தல் மற்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஆகியன தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்படவுள்ளன.
தமிழ் முற்போக்கு கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய உட்பட மேலும் சில கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியில் பங்காளிக் கட்சிகளாக அங்கம் வகிக்கின்றன.
அதேவேளை, குறித்த சந்திப்பு நடைபெற்று முடிவடைந்த பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் மத்தியசெயற்குழுக் கூட்டத்தையும் பிரதமர் கூட்டுவார் என தெரியவருகின்றது.
கருத்து தெரிவிக்க