சினிமா

திரையரங்கு உரிமையாளர்களால் ரஜினி, விஜய் மற்றும் அஜித் சிக்கலில்!

முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை திரையரங்குகளில் திரையிடும் போது வரும் வருமானத்தில் தமக்கு வழங்கப்படும் தொகையானது குறைவாக உள்ளது என வினியோகஸ்தர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக, முன்னணி நடிகர்கள் படங்களுக்கு அதிகபட்சமாக 70, 75 சதவீதம் வரையும், சாதாரண நடிகர்கள் படங்களுக்கு 45 சதவீதம் வரையும் வினியோகஸ்தர்களுக்கு பங்கு கொடுத்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் தங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாக திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து புதிய பங்கு தொகை பட்டியலை வெளியிட்டு உள்ளனர்.

அதன்படி ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார் படங்களுக்கு முதல் வாரத்தில் ஏ சென்டரில் 60 சதவீதம் தொகையும், மற்ற சென்டரில் 65 சதவீதம் தொகையும் வினியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளனர்.

இதே நடிகர்களின் படங்களுக்கு இரண்டாவது வாரத்தில் ஏ சென்டரில் 55 சதவீதம் தொகையும், மற்ற சென்டரில் 60 சதவீதம் தொகையும் வழங்கப்படும். சூர்யா, ஜெயம்ரவி, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோரின் படங்களுக்கு முதல் வாரத்தில் ஏ சென்டரில் 55 சதவீதம் தொகையும், மற்ற சென்டரில் 60 சதவீதம் தொகையும் வழங்கப்படும்.

இதே நடிகர்களின் படங்களுக்கு இரண்டாவது வாரத்தில் ஏ சென்டரில் 50 சதவீதம் தொகையும், மற்ற சென்டரில் 55 சதவீதம் தொகையும் வழங்கப்படும். இவர்கள் தவிர மற்ற நடிகர்கள் படங்களுக்கு அனைத்து சென்டர்களிலும் 50 சதவீதம் தொகையும், இரண்டாவது வாரத்தில் 45 சதவீதம் தொகையும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதை அமல்படுத்துவது குறித்து அடுத்த மாதம் திருச்சியில் நடைபெறும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் ஸ்ரீதர் கூறினார்.

கருத்து தெரிவிக்க