ரிசார்ட் பதியூதீனுக்கு மாத்திரம் தண்டனை வழங்கிக் கொடுத்து அரசாங்கத்தை பாதுகாக்கும் திட்டம் மக்கள் விடுதலை முன்னணிக்கு இல்லையென அக்கட்சியின் பிரதம செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
வெலிமடை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற தாக்குதலில் தொடர்புடைய முதலாவது குற்றவாளிகள் இறந்து விட்டார்கள் இரண்டாவது குற்றவாளிகள் அரசாங்கமாகும். அவர்களைத் தண்டிக்க புதிய அரசாங்கமொன்றை உருவாக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தொடர்பில் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் அதனை உறுதிப்படுத்துவதற்காக மக்கள் விடுதலை முன்னணியினால் நம்பிக்கையில்லா பிரேரனையொன்று முன்வைக்கப்பட்ட போதிலும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டவர்களினால் அதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகவும் ரில்வின் சில்வா சுட்டிக்காட்டினார்.
ரிசார்ட் பதியூதீனுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரனை தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணிக்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது. இதற்கு பொறுப்பு கூறவேண்டியது ரிசார்ட் பதியூதீன் மாத்திரமல்ல ஒட்டுமொத்த அரசாங்கமுமே என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க