உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ராஜித்தவின் புத்திஜீவிகள் குழு முன்னால் சாட்சியமளிக்க குருணாகல் வைத்திய அதிகாரிகள் மறுப்பு

கருத்தடை சிகிச்சை சர்ச்சையில் சிக்கியுள்ள வைத்தியர் சாஃபி தொடர்பிலான உண்மை நிலையை ஆராய்வதற்கு சுகாதார அமைச்சரினால் நியமிக்கப்பட்ட புத்திஜீவிகள் குழு முன்னிலையில் சாட்சியமளிக்க குருணாகல் போதனா வைத்தியசாலை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக எடுக்கப்படும் தீர்மானங்கள் தொடர்பில் ‘குருணாகலை போதனா வைத்தியசாலையை பாதுகாக்கும் சங்கத்தினால்’ எழுத்து வடிவில் குருணாகலை போதனா வைத்தியசாலை பணிப்பாளருக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
குருணாகல் போதனா வைத்தியசாலை பாதுகாப்பு சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் இந்திக்க ரத்நாயக்க கருத்து தெரிவிக்கையில், கருத்தடை சிகிச்சை சர்ச்சையில் சிக்கியுள்ள வைத்தியர் சாஃபி தொடர்பிலான உண்மை நிலையை ஆராய்வதற்காக அமைச்சர் ராஜித்த சேனாரத்னவினால் அமைக்கப்பட்டுள்ள புத்திஜீவில் குழு மீது எந்த நம்பிக்கையும் இல்லையெனவும், அவ்வாறானதொரு குழுவிற்கு முன்னால் சாட்சியமளிக்க முடியாது என கூறி குருணாகலை போதனா வைத்தியசாலை பாதுகாப்பு சங்க உறுப்பினர்கள் அனைவரும் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க