உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்முக்கிய செய்திகள்வடக்கு செய்திகள்

ரிசாத்தை பாதுகாக்கவே ரணில் பனை அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கியுள்ளார்.

தற்போதைய ரணில் விக்கிரமசிங்க அரசாங்கமானது வடக்கு மாகாணத்திற்கு பனை அபிவிருத்திக்காக ஐந்து பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்துள்ளது

எனினும் நீர்த்தேவையுள்ள வடமாகாணத்திற்கு ஐந்து மில்லியன் ரூபாய் மாத்திரமே ஒதுக்கீடு செய்துள்ளது என்று வன்னி மவட்டத்திற்கான சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர் சமிந்த பிரித்திவிராஜ் வாசல குற்றம் சுமத்தியுள்ளார்.

வவுனியாவில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இதனைக்குறிப்பிட்டார்.
பனை அபிவிருத்திக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ஐந்து பில்லியன் ரூபாய் என்பது இந்த மாவட்டத்திற்கு காணப்படுகின்ற நீர்த்தேவையை விட முக்கியமானதா என்ற கேள்வி எழும்புகின்றது.

மக்களின் அவசிய தேவையான நீர்த்தேவையை விட பனை அபிவிருத்திக்கு இவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டதன் காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இந்த நிதியை வழங்கி அதனூடாக வடபகுதி மக்களுடைய வாக்குகளை சூறையாடி தனது அரசாங்கத்தை நிலைநிறுத்திக்கொள்வது மாத்திரமன்றி ரிசாட் பதியூதினுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரனைக்கு எதிராக வாக்களிப்பதற்காகவே ஆகும்.

வில்பத்தில் ஏற்படுத்திய காடழிப்பு மற்றும் குருணாகலில் இன அழிப்பை ஏற்படுத்திய வைத்தியரையும் இந்த அரசாங்கம் பாதுகாத்து வைத்திருக்கிறது.

ஆனால் அடிப்படை வசதிகளற்ற மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யாது தங்களது அரசியல் சுயலாபத்திற்காகவும் தங்களது அரசாங்கத்தை தக்கவைப்பதற்காகவுமே ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்கின்றது. என அவர் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க