உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டார் ஞானசார!

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் வணக்கத்திற்குரிய கலபொட அத்தே ஞானசார சேதரர் சிறையிலிருந்து விடுதலையான பின்னர் முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து அதில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு உதவிய முஸ்லிம் அடிப்படை வாதிகள் தொடர்பான விபரங்களை வெளியிட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி தனியார் பல்பலைக்கழகமொன்றின் உரிமையாளர் அடிப்படைவாத கொள்கைகளை கற்பிப்பதற்கு நேரடியாக பணம் செலவு செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளமை தொடர்பில் தகவல்களை ஞானசார தேரர் வெளியிட்டார். அவரை கைது செய்வதற்கு பாதுகாப்பு தரப்பினரிடம் கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.
மேலும் சவுதி அரேபிய உளவுத்துறையே இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை தூண்டி இஸ்லாமிய தீவிரவாதத்தை கட்டியெழுப்பியுள்ளதாக ஞானாசார தேரர் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

“வஹாப்வாதத் தலைவர்கள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சோமாலியா போன்ற நாடுகளில் உருவாக்கப்படு கிறார்கள் என்றுதான் நாங்கள் இதுவரை நினைத்திருந்தோம். ஆனால் பீகாஸ் என்ற வெளிநாட்டுப் பட்டப்படிப்பு நிறுவனத்தின் ஊடாக 200 பேர் பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். அபிவிருத்தி அடைந்த நாடுகளிலிருந்தே பயிற்சிகள் அளிக்கப்பட்டு இவர்கள் மீள அனுப்பப்படுகின்றனர். அப்போது சந்தேகம் வராது. யார் இந்த நபர்கள்? பேச்சுக்கள் இன்றி இவர்கள் கைது செய்யப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பலத்த பாதுகாப்பிற்கு மத்தியிலேயே பொதுபல சேனாவின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க