குருணாகலை போதனா வைத்தியசாலையின் வைத்தியசர் முஹம்மட் சாஃபியின் செயற்பாட்டு வட்டாரம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக சுகாதார அமைச்சினால் விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளமையானது அந்த சம்பவத்தின் உண்மைத் தன்மையை மூடி மறைப்பதற்காகவே என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க, வைத்தியர் சாஃபி ஒரு மகப்பேற்று வைத்திய நிபுணர் என பலர் கூறுகின்ற போதிலும் அவர் அவ்வாறான ஒரு வைத்தியர் கிடையாது என தெரிவித்துள்ளார்.
அவர் ஒரு சாதாரண வைத்தியர் ஒருவர் தான், அவர் உத்தியோகபூர்வமான சுகாதார மன்ற உத்தியோகத்தர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுவரை அவருக்கு எதிராக 50 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இந்த விடயம் தொடர்பில் சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர்கள் இருவரிடம் கேட்டபோது அவ்வாறு சத்திரசிகிச்சை செய்து குழந்தையை பிரசவிக்கும்போது பலோபி நாளத்தை பல்வேறு பகுதிகளில் அழுத்தும் போது மற்றுமொரு குழந்தையை பெற்றெடுக்க பெண்களுக்கு வாய்ப்பில்லாமல் போகும் என தெரிவித்ததாக சுட்டிக்காட்டினார்.
அதனால் இந்த விடயம் தொடர்பில் சரியான தகவல்களை அறிந்து கருத்துக்களை வெளியிடுவதை விட்டுவிட்டு வீண் வார்த்தைகளை வெளியிடவேண்டாமென அசாத் சாலியிடம் கேட்டுக் கொள்கிறேன்.
கருத்து தெரிவிக்க