பழைய சம்பவங்களை தற்போது நடந்த புதிய சம்பவங்களாக சித்தரித்து சமூக ஊடக வலைத்தளங்களில் பதிவிடுவதாக சில முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அதனால் சமூக ஊடக வலைத்தளங்களை பயன்படுத்தும் போது மிக கவனமாக பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு விடயங்களை தெளிவுபடுத்திய பொலிஸ் அத்தியட்சகர், சமூக ஊடக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் போது மிக அவதானமாக செயற்பட வேண்டும். அதற்கு காரணம் மிகப் பழைய சம்பவங்களை தற்போது நடந்த சம்பவங்களாக சித்தரித்து அவை சமூக ஊடக வலைத்தளங்களில் வளம் வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இது மக்களுக்கிடையில் அமைதியின்மையையும், சமாதானத்தையும் சீர்குலைத்துள்ளதோடு, கலவரத்தையும் தூண்டிவிடுகிறது. அதனால் மிக அவதானமாக சமூக ஊடக வலைத்தளங்களை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க