உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

இலங்கைக்கு உடனடியாக ஐ.நா. கண்காணிப்புக் குழுவொன்றை அனுப்ப வேண்டும் – விக்ணேஸ்வரன்

கிழக்கு மாகாணத்தில் 10 இராணுவச் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதால் உடனடியாக கண்காணிப்புக் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்ப வேண்டுமென வடமாகாண முன்னால் முதலமைச்சர் சி. விக்ணேஸ்வரன் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டாரேஸிடம் முறைப்பாடு செய்துள்ளார். இந்த முறைப்பாட்டை அவர் நேற்றைய தினம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த இராணுவ சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டதால் மக்களது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் தமிழ் பெண்களுக்கு இடையூறுகள் விளைவிக்கப்படுவதாகவும் அவர் தனது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான சோதனைச் சாவடிகளில் கொழும்பில் அமைக்கப்படவில்லையெனவும், அவசரகாலச் சட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்தியமையானது தமிழ் மக்கள் மீது இராணுவப்பலத்தைக் காட்டுவதற்காகவே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க