ஐ.எஸ். மௌலவிகள் பலர் இலங்கைக்குள் ஊடுருவி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்புடைய தௌய்த் ஜமாத் அமைப்பின் தலைவர் ஸஹராணுக்கும் இந்திய தமிழ் நாட்டிற்கும் இடையில் இருந்த அனைத்து தொடர்புகளையும் இந்திய பாதுகாப்பு ஏஜென்ஸி கண்டுபிடித்துள்ளது.
தமிழ் நாட்டின் 10 இடங்களில் சோதனைகளை மேற்கொண்ட இந்திய இரகசிய பாதுகாப்புப் படையினர் ஐ.எஸ். அமைப்பின் ஆவணங்கள், சிம் கார்ட், செல்லிட தொலைபேசிகள், மடி கணணி உள்ளிட்ட பல பொருட்களைக் கைப்பற்றியுள்ளது.
ஸஹராணுடனின் வட்-அப் சமூக வலைத்தள பெயரில் தொடர்பில் அங்கத்தினராக இருந்த 10 ஐ.எஸ். செயற்பாட்டாளர்களின் விபரங்களும் இந்த தேடுதல் நடவடிக்கையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழ் நாட்டில் ஐ.எஸ். அமைப்பின் செயற்பாட்டாளர்கள் இருப்பதாக அப்துல் ரஹ்மான் மற்றும் முஹம்மட் றிஸ்வான் ஆகியோரின் மூலமே தெரியவந்துள்ளது. அவர்கள் ஐ.எஸ். இலச்சினை அடங்கிய டி-சேர்ட்டுகளை விநியோகித்துக் கொண்டிருக்கும் போது அவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தமிழ் நாட்டில் இருந்து ஐ.எஸ். செயற்பாட்டாளர்களிடம் இருந்து பல்வேறு இலத்திரனியல் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கடந்த காலங்களில் ஐ.எஸ். மௌலவிகள் பலர் நாட்டிற்குள் வந்துள்ளதாக இந்திய பாதுகாப்பு தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க