கருத்தடை சத்திரசிகிச்சை செய்ததாகக் கூறப்படும் குருணாகலை போதனா வைத்தியசாலையின் வைத்தியர் சேகு ஷிஹாப்தீன் முஹம்மட் ஷாஃபி என்பவரை கைது செய்தமை தொடர்பாக குருணாகலை பிரதி பொலிஸ் மா அதிபருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென அசாத் சாலி தெரிவித்துள்ள கருத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வைத்தியர் கைது செய்யப்பட்டமை குறித்து தாம் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பாதுகாப்பு கவுன்ஸிலுக்கு அறிவுறுத்தியதாக மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்.
அதுகுறித்து கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியவர்கள் அதனை குழிதோண்டி புதைப்பதாகவும் கூறினார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க, பாதுகாப்பு கவுன்ஸிலுக்கு தெரிவித்த கோரிக்கையினால் ஜனாதிபதிக்கு பாரிய பாதிப்புக்கள் ஏற்படுமெனவும் கூறினார்.
கருத்து தெரிவிக்க