உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

தீவிரவாதி என கூறப்படும் செப்புத் தொழிற்சாலை ஊழியருக்கு 10ம் திகதி வரை விளக்கமறியல்

கொழும்பு ஷங்கிரிலா நட்சத்திர ஹோட்டலில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதல் மேற்கொண்டதாகக் கூறப்படும் நபருக்குச் சொந்தமான வெல்லம்பிட்டி செப்பு தொழிற்சாலையில் கடமையாற்றிய கருப்பையா ராஜேந்திரன் எனும் அப்துல் என்ற சந்தேக நபரை எதிர்வரும் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்றைய தினம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதவான் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

இந்த வழக்குடன் தொடர்புடைய 8 பேர் பிணையில் விடுதலை செய்வதற்காக நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் கருப்பையா ராஜேந்திரன் என்ற அப்துல்லாவான சந்தேகநபர் தேசிய தௌய்த் ஜமாத் அமைப்பின் தலைவருடன் நெருங்கிய நட்பு வைத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் அவருக்கு எதிராக தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரை விசாரணை செய்ய வேண்டுமெனவும் தீவிரவாத தடுப்புப் பிரிவு பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்தே சந்தேக நபருக்கு எதிர்வரும் 10ம் திகதி வரை விளக்கமறியல் வழக்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க