இந்தியா

சிக்கலான “ஆபரேஷன்”.. லடாக் இன்று பேச்சுவார்த்தை – ஹரீந்தர் சிங்கை அனுப்பும் இந்திய ராணுவம்..

லடாக்: இந்தியா – சீனா இடையே லடாக் எல்லையில் இன்று நடக்கும் பேச்சுவார்த்தையில் இந்தியா சார்பாக லெப்டினன் ஜெனரல் ஹரீந்தர் சிங் கலந்து கொள்கிறார்.

இந்தியா – சீனா இடையே லடாக் எல்லையில் இன்று பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இரண்டு நாட்டு எல்லை பிரச்சனையை தீர்க்கும் வகையில் இன்று பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இரண்டு நாட்டுக்கும் இடையில் கடந்த 40 நாட்களாக பிரச்சனை இருந்து வருகிறது.
இந்த நிலையில் இன்றி அமைதி பேச்சுவார்த்தை முதல் கட்டமாக நடக்க உள்ளது. லடாக்கில் சுசுல் மோல்டோ பகுதியில் பாங்காங் திசோ அருகே இந்த மீட்டிங் நடக்க உள்ளது.

இந்தியா – சீனா இடையே லடாக் எல்லையில் இன்று நடக்கும் பேச்சுவார்த்தையில் இந்தியா சார்பாக லெப்டினன் ஜெனரல் ஹரீந்தர் சிங் கலந்து கொள்கிறார். லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங் லடாக்கில் லேவில் இருக்கும் 14வது பாதுகாப்பு படை பிரிவின் லெப்டினன்ட் ஜெனரல் ஆவார். நெருப்பு மற்றும் சீற்றம் என்று பொருள்படும் வகையில் இவரின் படைப்பிரிவுக்கு ‘Fire and Fury Corps’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இவர் ஏற்கனவே இந்தியா சீனா பிரச்சனை குறித்து பேசியவர்தான். இந்தியாவும் சீனாவையும் 1962க்கு பிறகு எல்லை பிரச்சனையை பேசி தீர்த்து இருக்கலாம். ஆனால் அதை செய்யவில்லை. தொடர்ந்து எல்லையில் சிறிய சிறிய மோதல்கள் வருகிறது. இப்படி சண்டைகள் வருவது பெரிய்ய சண்டைக்கு வித்திடும் என்று 2010லேயே லெப்டினன் ஜெனரல் ஹரீந்தர் சிங் குறிப்பிட்டு இருந்தார். இப்போது அவர்தான் இந்த பேச்சுவார்த்தைக்கு செல்கிறார்.

இவர் வழி நடத்தும் படை வலிமை வாய்ந்த சக்தி மிகுந்த படையாகும் இது. இந்த படை லே மற்றும் கார்கில் ஆகிய இரண்டு பகுதிகளில் பாதுகாப்பு பணிகளை செய்து வருகிறது. அதேபோல் சியாச்சின் பகுதிகளிலும் இந்த படைதான் பாதுகாப்பு பணிகளை செய்து வருகிறது. இந்த படை பிரிவின் லெப்டினன் ஜெனரலாக ஹரீந்தர் சிங் இருக்கிறார். கடந்த வருடம் அக்டோபர் மாதம்தான் இந்த படைப்பிரிவின் லெப்டினன்ட் ஜெனரல் பொறுப்பில் ஹரீந்தர் சிங் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதற்கு முன் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி இருக்கிறார். இவர் இதற்கு முன் ராணுவ புலனாய்வு குழுவின் இயக்குனர், பொது ராணுவ நடவடிக்கைகளின் இயக்குனர் மற்றும் ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்கள் கட்டுப்பாட்டு இயக்குனர் பொறுப்பில் இருந்துள்ளார். இந்த நிலையில் இன்று அவருக்கு மிக முக்கியமான டாஸ்க் கொடுக்கப்பட்டது உள்ளது. இரண்டு நாட்டு அமைதி அவரின் கையில் உள்ளது.

இன்று நடக்கும் ஆபரேஷன் மிகவும் சிக்கலானது என்று கூறுகிறார்கள். லடாக் எல்லையில் சென்று எதிரி நாட்டு வீரர்களுடன் பேசி அமைதியை கொண்டு வருவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. ஆனால் ஹரீந்தர் சிங் இதை செய்து ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இன்றைய மீட்டிங் காரணமாக மொத்த இந்தியர்களின் பார்வையின் ஹரீந்தர் சிங் பக்கம் திரும்பி இருக்கிறது.

கருத்து தெரிவிக்க