சினிமா

சினிமாவில் கால் பதித்துள்ள பிக்பாஸ் 3 லொஸ்லியா!

இலங்கையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருந்த லொஸ்லியா பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்று புகழின் உச்சிக்கு சென்றார்.

தற்போது சினிமா வாய்ப்புகள் அவரை துரத்தும் நிலையில், கதாநாயகியாக நடிக்கும் ‘பிரண்ட்ஷிப்’ என்ற அவரது முதல்படத்தின் போஸ்டர்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. அதில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் அர்ஜுன் ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த போஸ்டர்கள் இணையத்தில் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

கருத்து தெரிவிக்க