இலங்கை

PCR பரிசோதனைகளை நிராகரிக்கும் வெளிநாட்டவர் மீண்டும் தங்களது சொந்த நாட்டிற்கே அனுப்பப்படுவர்.

நேற்றைய தினம் அமெரிக்க தூதரக இராஜதந்திரி ஒருவர் இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் PCR பரிசோதனைகளை நிராகரித்து குழப்பம் ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, இனிமேல் நாட்டிற்கு வருகை தரும் அனைத்து பிரஜைகளும் PCR பரிசோதனைக்கள் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் குழப்பத்தை ஏற்படுத்தும் பட்சத்தில் அவர்களது சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அனைத்து அமெரிக்க இராஜதந்திர ஊழியர்களும் வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து செயற்பட வேண்டும் என அமெரிக்க தூதரகம் மேலும் அறிவித்துள்ளது. அதில், இலங்கையில் மேற்கொள்ளப்படும் அனைத்து கொரோனா வழிகாட்டல்களையும் பின்பற்றுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க