உலகம்

அமெரிக்காவில் மரணித்த ஜோர்ஜ் பிலோய்ட் இன் கண்ணீர் அஞ்சலி!

மினியாபொலிஸ் நகரில் அமெரிக்க காவற்துறையினரின் கைதின் போது , உயிரிழந்த ஜோர்ஜ் பிலோய்ட் இன் கண்ணீர் அஞ்சலி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நேரப்படி பிற்பகல் 1 மணிக்கு நடாத்தப்படும் இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான பொது மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜோர்ஜின் மரணத்தை கண்டித்து அமெரிக்காவில் மட்டுமல்ல, பிரித்தானியா போன்ற நாடுகளிலும் பெரும் கொந்தளிப்பும் ஆர்ப்பாட்டங்களும் நிகழ்ந்தன. இவரின் மரணத்திற்கு காரணமான நான்கு காவல்துறையினரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதோடு, தற்போது குற்றவியல் விசாரணையையும் எதிர் கொள்ள உள்ளனர்.

மேலும் ஜோர்ஜ் மரணம் தொடர்பாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பார்க் ஒபாமா, கடுமையான வார்த்தைகளால் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அதேவேளை , பிரித்தானிய இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மேர்க்கல் , உணர்வு பூர்வமான கருத்துக்களை வெளியிட்டு ஆர்ப்பாட்டங்களுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.

ஜோர்ஜ் மரணத்தின் அஞ்சலிக்கு பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதோடு, மினியாபோலிஸ் நகரில் இரங்கல் கூட்டம் ஒன்று நடைபெற இருப்பது, முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க