இந்தியா

எல்லையில் சீன ராணுவத்தின் கட்டமைப்புகள் தொடர்பான விரிவான அறிக்கை மத்திய அரசிடம் தாக்கல்!

இந்திய எல்லைப்பகுதியான லடாக்கில் சீன ராணுவம் அமைத்துள்ள கட்டடங்கள் மற்றும் குவிக்கப்படுள்ள படைகள் தொடர்பான விரிவான அறிக்கையை பாதுகாப்பு நிறுவனம் மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளது.
இந்திய சீனா எல்லைப்பகுதியான லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி அருகே கடந்த மாதம் சீன ராணுவத்தினர் இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்தனர். இதனை அடுத்து இரு தரப்பு வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் இப்போது புதாகரமாக வெடித்துள்ளது. இதனால் இரு நாடுகளில் எல்லைப் பகுதிகளான பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு, நகுலா பாஸ் ஆகிய பகுதிகளில் சீனா கூடுதல் படைகளை குவித்துள்ளது.
இதற்கு பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவம் எல்லையில் படைகளை குவித்துள்ளது.

இதனால் கடந்த ஒரு மாதமாக எல்லையில் போர் பதற்றம் நிலவில் வருகிறது. இதனை தொடர்ந்து சீனா ஆக்கிரமிப்புகள் தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய பாதுகப்பு நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்திய எல்லைப்பகுதிகளில் சீனா அமைத்துள்ள கட்டடங்கள் மற்றும் குவித்துள்ள படைகள் தொடர்பான விரிவான ஆய்வறிக்கையை பாதுகாப்பு நிறுவனம் மத்திய அரசிடம் இன்று தாக்கல் செய்தது.

அதில் கிழக்கு லடாக்கில் உள்ள டவுலெட் பெக் ஓல்டி மற்றும் பாங்காங் ஏரி உள்ளிட்ட முக்கிய பகுதிகள் சீனா உருவாக்கியுள்ள ராணுவ நிலைகள் தொடர்பான விபரங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த எல்லைப்பகுதிகளில் சீனா எவ்வாறு துரிதமாக கட்டடங்களை கட்டி எழுப்புகிறது என்பதையும் பெரிய அளவிலான படைகளை குவித்து வருவதையும் மத்திய அரசு மதிப்பீடு செய்துள்ளது.
இதனிடையே இரு நாடுகளின் ராணுவ உயர் மட்ட அதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர முக்கிய முடிவுகள் எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க