52 நாட்கள் அரசியல் பிரளயத்தின் போது,( 2018 ஒக்டோபர் மாதம்) மஹிந்த தலைமையில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேரம் பேசும் நடவடிக்கையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க இறங்கினார்.
ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரான பாலித ரங்கே பண்டார, எஸ்.பி. திஸாநாயக்க தன்னுடன் உரையாடியதை அம்பலப்படுத்தி, எஸ்.பிக்கு பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தினார். இந்த உரையாடலானது தெற்கு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திருந்தது.
இந்நிலையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தரப்பும், தற்போது தொலைபேசி உரையாடலொன்றை அம்பலப்படுத்தியுள்ளது. அதன் விபரம் வருமாறு,
( SB என்பது எஸ்.பி. திஸாநாயக்கவையும், RB என்பது ரிஷாட்டையும் குறிக்கும்.)
SB: ரிஷாட்….
RB : ஆம், அமைச்சரே!
SB: ரிஷாட்….
RB: ஆம், கதைக்கிறேன்…
SB: பேசக்கூடிய இடத்திலயா இருக்கிறீங்க?
RB: சொல்லுங்கள்…
SB: ஓட வேண்டிய ஓட்டங்களையெல்லாம் ஓடி முடித்துவிட்டோம். துமிந்த உட்பட எல்லோரும் முடிவாயிட்டு. சின்னச் சின்ன ஆட்களை உள்வாங்கி பிரயோசனம் இல்லை. இது தான் சந்தர்ப்பம் நீங்கள் எல்லோரும் ஒரேயடியாக வந்திருங்கள்…..
RB: ஆஹ்ஹ்…
SB: பெரிய எதிர்பார்ப்போடு இருக்கிறோம்.
RB: அப்படியா!
SB: இரண்டு ஜனாதிபதியும் ரெடியாக இருக்கின்றனர். இப்ப நீங்கள் வந்து அமர்வது மட்டும் தான் மீதியாக இருக்கின்றது.
RB: ம்ம்ம்…..
SB: கொழும்பிலா இருக்கிறீர்கள்?
RB: சிறிய வேலை ஒன்றிற்காக ஒரு பயனம் வந்திருக்கின்றேன்.
SB: நாளைக்கு… நாளைக்கு…
RB: இரவைக்கு நின்றுதான் வருவேன், நாளைக்கு பார்ப்போம்…
SB: கொழும்பு வந்ததும், என்னோடு தொடர்புகொள்ளுங்கள்.
கருத்து தெரிவிக்க